Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.பி.எல். தொடரில் இருந்து முக்கிய R.C.B வீரர் விலகியுள்ளார் !

I.P.L News.

ஐ.பி.எல். தொடரில் இருந்து முக்கிய R.C.B  வீரர்   விலகியுள்ளார் !
X

Pradeep GunasekaranBy : Pradeep Gunasekaran

  |  31 Aug 2021 2:21 PM IST

செப்டம்பர் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். 2021 தொடரின் எஞ்சிய போட்டிகள் நடைபெற உள்ளது. துபாயில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் ஆர்.சி.பி. அணியின் சுழற்பந்து வீச்சாளரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வாஷிங்டன் சுந்தர் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். 2021 தொடரில் ஆறு ஆட்டங்களில் விளையாடி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கடந்த 2018-ல் ஆர்.சி.பி. அணியில் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், இதுவரை 32 ஆட்டங்களில் விளையாடி 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக, ஆர்.சி.பி. அணியில் சுந்தருக்கு பதிலாக பெங்கால் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப்-ஐ எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆர்.சி.பி. மேலும் ஐந்து வீரர்களையும் தேர்வு செய்துள்ளது.

Image : RCB வெப்

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News