Kathir News
Begin typing your search above and press return to search.

கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும், நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் திருமணமா? இன்ஸ்டாவில் பதிவிட்ட கருத்தால் சர்ச்சை.!

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா உள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் பும்ராவுக்கும், நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் திருமணமா? இன்ஸ்டாவில் பதிவிட்ட கருத்தால் சர்ச்சை.!
X

ThangaveluBy : Thangavelu

  |  4 March 2021 10:00 AM IST

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா உள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிரான முதல் மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.

இதன் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக 4வது டெஸ்ட் போட்டியில் இருந்து தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு பும்ரா கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு விடுப்பு கிடைத்தது.

இந்நிலையில், பும்ரா விடுப்பு எடுத்த காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தன்னுடைய திருமணத்திற்கான வேளைகளை செய்வதற்கு விடுப்பு எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பும்ரா யாரை திருமணம் செய்து கொள்வார் என்று அவருடைய ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பும்ராவின் காதலி என்று பேசப்பட்டு வந்த நடிகை அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'இனிய விடுமுறை எனக்கு' என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு வேளை பும்ரா நடிகை அனுபமாவை திருமணம் செய்து கொள்வாரா என்று சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது. விரைவில் இது பற்றிய அறிவிப்புகள் வெளிவர வாய்ப்புள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News