படுதோல்வியை சந்தித்த இந்திய அணி.. கேப்டன்சியில் மாற்றம் நிகழுமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தொடர்ந்து கேப்டன்ஸியில் மாற்றம் நிகழுமா?
By : Bharathi Latha
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்ததில் இருந்து மீண்டும் கேப்டன்சி குறித்த விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக இந்திய அணிக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணி அதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டதாகவும் குறிப்பாக கேப்டன் தன்னுடைய பணியை முழுமையாக செய்யவில்லை என்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக ரசிகர்கள் மத்தியில் கேப்டனை மாற்ற வேண்டும் என்ற ஒரு சர்ச்சையும் எழுந்து இருக்கிறது.
முன்பு கேப்டனாக இருந்த விராட் கோலி பதவி விலகியது ஏன் என்று ஒரு சர்ச்சை தற்போது எழுந்து இருக்கிறது. தென்னாப்பிரிக்கா டெஸ்ட் கிரிக்கெட் தொடருடன் திடீரென கேப்டன்சியை விலகியது ஏன் என்றும், BCCI தலைவர் கங்குலி உடனான மோதலால் மட்டுமே விராட் கோலி பதவி விலகினார் என்றும் ரசிகர்கள் மத்தியில் கருத்து எழுந்துள்ளது. இந்த நிலையில் விராட் கோலி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகியது பற்றி கங்குலி பேசியுள்ளார்.
அந்த நேரத்தில் இந்திய அணிக்கு உடனடியாக ஒரு கேப்டனை நியமிக்க வேண்டிய பொறுப்பு தேர்வுக் குழுவுக்கு இருந்தது. இதன் காரணமாக அப்பொழுது அணியின் சிறப்பாக ஆட்ட வீரராக இருந்த ரோகித் சர்மா விராட் கோலிக்கு பதிலாக கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதற்கு கங்குலியின் நடவடிக்கையே காரணமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த உண்மை வெளிவந்து இருக்கிறது.
Input & Image courtesy:News