Kathir News
Begin typing your search above and press return to search.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் வீளாசிய கேன் வில்லியம்சன்.!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் வீளாசிய கேன் வில்லியம்சன்.!

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் வீளாசிய கேன் வில்லியம்சன்.!

Pravin kumarBy : Pravin kumar

  |  4 Jan 2021 5:28 PM GMT

நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தில் உள்ள செஸ்ராக் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.


முதலில் விளையாடி பாகிஸ்தான் அணியில் ஆஷார் அலி அதிகபட்சமாக 93 ரன்கள் அடித்தார். ரிஸ்வான் 61 ரன்களும் பாஷிம் அஷ்ரப் 48 ரன்கள் சேர்த்தனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 297 ரன்கள் அடித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது பாகிஸ்தான் அணி. இதை தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் லேதம் 33 ரன்னில் அவுட் ஆக பவுவெல் 16 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து களம் இறங்கிய கேப்டன் வில்லியம்சன் அசத்தலான ஆட்டத்தை வெளிபடுத்தினார். ரோஸ் டெய்லர் 12 ரன்களில் வெளியேற பின்னர் வந்த நிக்கோலஸ் கேப்டன் வில்லியம்சன் உடண் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த வில்லியம்சன் சதம் வீளாசி அசத்தினார். வில்லியம்சன் கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் தொடரந்து சதம் மற்றும் இரட்டை சதம் என அடுத்தடுத்து அசத்தி வருகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News