200 போட்டிகளில் கேப்டனாக இருந்த முதல் வீரர்... அட நம்ம தோனி இல்லாமல் வேற யாரு!
சென்னை அணிக்கு 200 ஆட்டங்களுக்கு மேல் கேப்டன் பதவி வகித்த தோனிக்கு நினைவு பரிசு.
By : Bharathi Latha
ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் உடன் மோதியது.மேலும் இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தலைவர் தோனிக்கு இது 200 வது ஆட்டமாகும். இதன் மூலம் அவர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் ஒரு குறிப்பிட்ட அணிக்காக 200 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்த முதல் வீரர் என்ற ஒரு சாதனையும் படைத்து இருக்கிறார்.
ஏற்கனவே ரசிகர்களின் பெரும் ஆதரவை பெற்ற கிரிக்கெட் வீரர்கள் ஜாம்பவானாக தோனி இருந்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது அவருக்கு மணி முடி சூட்டும் வகையில் இந்த ஒரு நினைவு பரிசு வழங்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக டாஸ்க் போடுவதற்கு முன்பாக நடந்த பாராட்டு விழாவில் டோனிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவரும் இந்திய சிமெண்ட் நிர்வாக இயக்குனருமான என். சீனிவாசன் நினைவு பரிசு வழங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் சீனிவாசனின் மனைவி சித்ரா, மகள் ரூபா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு இருக்கிறார்கள். மேலும் 41 வயதான தோனி அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவிர்த்து மும்பை சூப்பர் ஜெயிண்ட் அணிக்கு 14 ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Puthiyathalaimurai