Kathir News
Begin typing your search above and press return to search.

ஐபிஎல்: கொல்கத்தாவுடன் இன்று மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடஸ் அணியும் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி புள்ளிப் பட்டியலில் உள்ளது. இதனிடையே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கும் சென்னை அணியில் ருதுராஜ், டுபிளிசிஸ், அம்பத்தி ராயுடு, மொயின் அலி, ரெய்னா, தோனி என்று வலுவான பேட்டிங் வரிசை உள்ளது.

ஐபிஎல்: கொல்கத்தாவுடன் இன்று மோதும் சென்னை சூப்பர் கிங்ஸ்!

ThangaveluBy : Thangavelu

  |  26 Sep 2021 1:08 PM GMT

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடஸ் அணியும் மோதுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஒன்பது போட்டிகளில் விளையாடி புள்ளிப் பட்டியலில் உள்ளது. இதனிடையே பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கும் சென்னை அணியில் ருதுராஜ், டுபிளிசிஸ், அம்பத்தி ராயுடு, மொயின் அலி, ரெய்னா, தோனி என்று வலுவான பேட்டிங் வரிசை உள்ளது.

மேலும், ஜடேஜா, ஷர்துல், தீபக் சாஹர், பிராவோ ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் அந்த அணி மிகவும் சூப்பராக இருக்கிறது. இதனிடையே இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் பிரே ஆப் சுற்றை சென்னை அணி உறுதி செய்ய வாய்ப்பு உள்ளது. கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அந்த அணியில் புதிய தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ள வெங்கடேஷ் ஐயர், பந்து வீச்சாளர்களை மிரட்டி வருகிறார்.

அதிலும் திரிபாதி, ரஸல், தினேஷ் கார்த்திக், கேப்டன் மோர்கன், சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் ஆகியோரும் சிறப்பான தோற்றத்தில் இருப்பதால் அந்த அணியும் வலுவாகவே அமைந்துள்ளது. இதன் காரணமாக இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: News 7 Tamil

https://news7tamil.live/chennai-super-kings-kolkata-knight-riders-look-to-keep-red-hot-uae-streak-alive.html

Next Story
கதிர் தொகுப்பு
Trending News