ஐஎஸ்எல் தொடரில் மும்பை அணியிடம் 2-1 என்ற கணக்கில் வீழந்தது சென்னை அணி.!
ஐஎஸ்எல் தொடரில் மும்பை அணியிடம் 2-1 என்ற கணக்கில் வீழந்தது சென்னை அணி.!

By : Pravin kumar
ஐஎஸ்எல் கால்பந்து லீக் தொடர் கோவாவில் பிரமாண்டமாக நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் நேற்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இந்த இரு அணிகளும் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி நேற்றய போட்டியில் கடும் சாவலை ஏற்படுத்தி கொண்டனர்.
இந்தப் போட்டியின் முதல் பாதியில் சென்னை அணி பெரும் ஆதிக்கம் செலுத்தியது. மும்பை சிட்டி அணி முதல் பாதியில் மிகச் சில சந்தர்ப்பத்தில் மட்டுமே பந்தை கைப்பற்றியது.

40வது நிமிடத்தில் சென்னை அணியின் ச்சாங்க்டே போட்டியின் முதல் கோலை அடித்தார். மும்பை அணி இதற்கு அடுத்த சில நிமிடங்களில் பதிலடி கொடுத்தது. ஹெர்னான் சான்டானா கார்னரில் இருந்து அசத்தலாக கோல் அடித்தார்.
இரண்டாம் பாதியில் 70வது நிமிடத்தில் மும்பை சிட்டி அணி தன் இரண்டாவது கோலை அடித்தது. இந்த கோலின் போது சென்னை அணி வீரர்கள் பந்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது பெரிய தவறாக அமைந்தது.

அதன் பின் சென்னை அணியால் கோல் அடிக்க முடியவில்லை. போட்டி 2 - 1 என்ற அளவில் முடிவுக்கு வந்தது. மும்பை சிட்டி அணி தொடர்ந்து நான்காவது போட்டியில் வெற்றி பெற்று பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
மும்பை அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி எட்டாவது இடத்தில் உள்ளது.
