ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி குறித்து தோனி கூறிய விளக்கம்.!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி குறித்து தோனி கூறிய விளக்கம்.!

By : Kathir Webdesk
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. வழக்கம் போல் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை அணி. முதலில் விளையாடிய சென்னை அணி பேட்டிங்க் முதலில் செய்கிறோம் என்ற சொல்லிவிட்டு மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தியது. தொடக்க வீரர்கள் சொதப்பல் வழக்கம் போல் மிடில் ஆடரும் சொதப்பல் அதை தொடர்ந்து சென்னை அணியின் மோசமான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் இளம் வீரர்களே வெற்றி கொடு நாட்டும் நிலையில் சென்னை அணியில் மட்டும் முரளி விஜய் மற்றும் கேதார் ஜாதவ் போன்ற எதுக்கும் ஆகாத வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பை கொடுப்பது என் என பல நாட்களாக கேள்விகள் ஏழுப்பப்பட்ட நிலையில் இளம் வீரர்கள் ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை என தோனி விளக்கம் கொடுத்தார்.
இது குறித்து தோனி பேசுகையில், "முதல் இன்னிங்ஸை போன்று இரண்டாவது இன்னிங்ஸ் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக அமையவில்லை. வேகப்பந்து வீச்சிற்கே கை கொடுத்தது. கடந்த நான்கு ஐந்து போட்டிகளில் நாங்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
பல மாற்றங்கள் செய்த போதிலும் முடிவு மட்டும் மாறாவே இல்லை. நாங்கள் இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு அவ்வளவாக வாய்ப்பு கொடுக்கவில்லை என்பது உண்மை தான், ஆனால் அதில் எந்த தவறும் இருப்பதாக நான் உணரவில்லை, எங்கள் அணியில் இருக்கும் இளம் வீரர்களில் நான் பெரிய உத்வேகம் எதையும் பார்க்கவில்லை. அடுத்தடுத்த போட்டிகளில் இளம் வீரர்களுக்கான வாய்ப்பு வழங்கப்படும். அவர்களும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாட இது ஒரு வாய்ப்பாக அமையும்" என்று தெரிவித்தார்.
