சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தெறிக்கவிட்ட கொல்கத்தா அணியின் பெர்குசன் .!
சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தெறிக்கவிட்ட கொல்கத்தா அணியின் பெர்குசன் .!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் ஆகிய இரு அணிகளும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐத்ராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங்க் செய்தது.
முதலில் களம் இறங்கிய சுக்மன் கில் மற்றும் திரிபாதி இருவரும் டிசன்ட் தொடக்கத்தை கொடுத்தனர் அதன் பின்னர் திரிபாதி 23 ரன்களில் அவுட் ஆக பின்னர் வந்த நித்திஸ் ராணா 29 ரன்கள் சேர்த்து அவுட் ஆகினார். கில் 36 ரன்னில் அவுட் ஆக பின்னர் வந்த அதிரடி மன்னன் வேஸ்ட் மன்னனாக மாறியது தான் கொல்கத்தா அணிக்கு பெரிய தலைவலி. ஆம் ரஸல் கடந்த சில போட்டிகளாக விளையாட தெரியாதவர் போல் விளையாடி வருகிறார். ரஸல் 9 ரன்னில் வெளியேற பின்னர் கடைசி நேரத்தில் ஜோடி சேர்ந்த கேப்டன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 163 ரன்கள் சேரத்தது.
பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக வில்லியம்சன் மற்றும் பேஸ்ரோ இருவரும் களம் இறங்க வில்லியம்சன் 24 ரன்னில் அவுட் ஆக அவரை தொடர்ந்து பேஸ்ரோவும் 36 ரன்னில் அவுட் ஆகினார். காரணம் இந்த போட்டியில் புதியதாக இணைந்த பெர்குசன் பந்து வீச்சு தான். அடுத்து வந்த கார்க் மற்றும் மனிஷ் பான்டே போன்றோர் பெர்குசன் பந்தில் வெளியேற வார்னர் களம் இறங்கிய பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். ஆனால் போட்டி இறுதி ஓவர்களில் நடந்த தடுமாற்றத்தில் போட்டி சமனில் முடிந்தது. சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணியின் பெர்குசன் சிறப்பான பந்து வீச்சினால் 2 ரன்கள் மட்டுமே அடித்தது. கொல்கத்தா அணி எளிதில் வெற்றி பெற்றது.
