மும்பை அணியிடம் சுருண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.!
மும்பை அணியிடம் சுருண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டி நேற்று ஷார்ஷா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை இன்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளும் பலப்பரிச்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதை தொடர்ந்து முதலில் சென்னை அணி களம் இறங்க மும்பை அணியின் வேகப்பந்து வீச்சில் சென்னை அணி முதல் பந்திலிருந்தே தடுமாறியது. போல்ட் வீசிய முதல் ஓவரில் புதிதாக களம் இறக்கப்பட்ட ருத்ராஜ் டக் அவுட் ஆக பின்னர் அடுத்த ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரில் ராய்டு டக் அவுட் ஆக அவரை தொடர்ந்து களம் இறங்கிய ஜெகதிஸ்சன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
சென்னை அணி பறிதாப நிலைக்கு சென்ற நிலையில் அடுத்த ஓவரில் மீண்டும் போல்ட் பந்தில் பாப் டுப் ப்ளஸிஸ் அவுட் ஆக தொடர் விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. பின்னர் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் அடுத்தடுத்த களம் இறங்க ஆனால் அவர்களும் சிறிது நேரத்தில் நடையை கட்ட சென்னை அணி மிகவும் மோசமான தோல்வியை அடைய இருந்த நிலையில் சாம் க்ர்ரன் நிலைத்து விளையாடி அரைசதம் வீளாசினார். சென்னை அணி 114 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் 115 ரன்னை இலக்காக நீர்ணயித்தது.
பின்னர் விளையாடிய மும்பை அணி முதல் விக்கெட்டை கூட இழக்காமல் எளிதில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சார்மா இல்லை என்றாலும் மும்பை அணி பலமான அணி என்பதை காட்டியது.
