கிரின் ஜெர்சியில் மீண்டும் சென்னை அணியிடம் தோற்ற பெங்களுரு அணி.!
கிரின் ஜெர்சியில் மீண்டும் சென்னை அணியிடம் தோற்ற பெங்களுரு அணி.!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரின் 44வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களுரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர்கள் பின்ச் மற்றும் படிக்கல் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை.
பின்ச் 15 ரன்னில் வெளியேற அவரை பின்தொடர்ந்து படிக்கல் 22 ரன்னில் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த கோலி மற்றும் டிவில்லியர்ஸ் பொருப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கோலி மற்றும் டிவில்லியர்ஸ் இணையை பிரிக்க சென்னை அணி போராடிய நிலையில் டிவில்லியர்ஸ் 39 ரன்னில் அவுட் ஆகி வெளியேற கோலி அரைசதம் விளாசி அவுட் ஆகினார். பின்னர் வந்த மோயின் அலி மற்றும் மோரிஸ் போன்ற வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழக்க பெங்களுரு அணி 145/6 ரன்கள் மட்டுமே அடித்தது.
பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். பாப் டுப் ப்ளஸிஸ் 25 ரன்னில் அவுட் ஆகினாலும் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தி அவுட் ஆக பின்னர் ராய்டு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 39 ரன்கள் சேர்த்து அவுட் ஆக நிலைத்து விளையாடிய ருத்ராஜ் கெக்வாட் அரைசதம் வீளாசினார். இதுவே சென்னை அணியின் வெற்றிக்கு உதவியது. பின்னர் தோனி 19 ரன்கள் அடிக்க சென்னை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ருத்ராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
