Kathir News
Begin typing your search above and press return to search.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 Oct 2020 10:57 AM GMT

ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற வரும் நிலையில் வரும் நவம்பர் மாதம் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி முன் கூடியே ஆஸ்திரேலியா சென்று அங்கு 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட பிறகே தொடரில் பங்கேற்க உள்ளனர்.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி மூன்று டி-20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்நிலையில் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. இந்திய அணியில் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சுக்மன் கில் அணியில் இடம் பிடித்துள்ளார்.

அதேபோல் புஜாரா, ராஹனே, ஹனுமன் விஹரி போன்ற டெஸ்ட் வீரர்கள் இந்திய அணியிலும் இடம் பெற்றுள்ளனர். அதை தொடர்ந்து ப்ரித்திவ் ஷா , மாயங்க் அகர்வால் , மற்றும் சுக்மன் கில் போன்ற இளம் வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். வேகபந்து வீச்சாளர்களை பொருத்தவரை இஷாந்த் சர்மா காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. மற்றபடி பும்ரா, முகமத் சமி, உமேஷ் யாதவ் போன்ற வழக்கமான வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் புதிதாக நந்திப் சைனி மற்றும் முகமத் சிராஜ் போன்ற இளம் வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

விராட் கோஹ்லி (கேப்டன்), மாயன்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கே.எல் ராகுல், சட்டீஸ்வர் புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, சுப்மன் கில்,விர்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News