ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா நீக்கம்!
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோஹித் சர்மா நீக்கம்!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமிரகத்தில் நடைபெற்ற வரும் நிலையில் வரும் நவம்பர் மாதம் 10ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி முன் கூடியே ஆஸ்திரேலியா சென்று அங்கு 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட பிறகே தொடரில் பங்கேற்க உள்ளனர்.
ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி மூன்று டி-20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது . இந்த தொடர் வரும் நவம்பர் 27ம் தேதி முதல் ஒரு நாள் போட்டி தொடர் தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ.
இந்திய அணியில் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா அணியில் இடம் பெறவில்லை. தற்பொழுது ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காத நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அனைத்து வீதமான போட்டிகளிலிருந்தும் ரோஹித் சர்மா பெயர் இடம் பெறாமல் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் ஒரு நாள் அணியில் புதிதாக சுக்மன் கில் மற்றும் சைனி இடம் பிடித்துள்ளனர். அதே போல் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ஹர்டிக் பாண்டியா, மனிஷ் பான்டே ஆகிய வீரர்கள் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
1) கோலி 2) தவான் 3) கில் 4) கே.எல் ராகுல் 5) ஷ்ரேயாஸ் ஐயர் 6) மனீஷ் பாண்டே 7) ஹார்டிக் பாண்டியா 8) அகர்வால் 9) ஜடேஜா 10) சாஹல் 11) குல்தீப் யாதவ் 12) பும்ரா 13) ஷமி 14) சைனி 15) ஷர்துல் தாகூர்.
