டெல்லி அணி வீழ்த்த முடிந்ததற்கு இதுவே காரணம் டேவிட் வார்னர் பதில்.!
டெல்லி அணி வீழ்த்த முடிந்ததற்கு இதுவே காரணம் டேவிட் வார்னர் பதில்.!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதை தொடர்ந்து முதலில் களம் இறங்கிய சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் விர்த்திமான் சாஹா இருவரும் வலுவான தொடக்கத்தை அமைத்து கொடுக்க சன் ரைசர்ஸ் அணி முதல் விக்கெட்டிற்கு 107 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் வார்னர் 66 ரன்கள் அடித்து அவுட் ஆகினார்.
பின்னர் விர்த்திமான் சாஹா சிறப்பான ஆட்டத்தை தொடர சன்ரைசர்ஸ் அணி வலுவான ஸ்கோரை நோக்கி சென்றது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சாஹா 87 ரன்கள் குவித்தார். சாஹா இந்த ஐபிஎல் தொடரில் களம் இறங்கிய முதல் இன்னிங்ஸ் இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது. பின்னர் களம் இறங்கிய மனிஷ் பான்டே 44 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் அணி 219 ரன்கள் சேர்த்தனர். பின்னர் விளையாடி டெல்லி அணி 131 ரன்கள் மட்டுமே அடித்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் கூறுகையில் : இந்த போட்டிக்கு முன்பாக நாங்கள் குறைந்த இலக்கை துரத்தும்போது தோற்று ஏமாற்றம் அடைந்தோம். இந்நிலையில் இன்றைய போட்டியில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு பந்துவீச்சாளர்களான ரபாடா, நோர்க்கியா ஆகியோருக்கு எதிராக அதிரடி காட்ட விரும்பினோம். நான் 2009ஆம் ஆண்டு ஆடியதுபோல தற்போது அதிரடியாக விளையாட முயற்சித்தேன்.
முன் காலை நகர்த்தி ஆடியதால் என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. இந்த போட்டியில் பேர்ஸ்டோவை நீக்கியது கடினமான முடிவு என்றாலும் சஹா சிறப்பாக விளையாடி அந்த இடத்தை நிரப்பிவிட்டார். பவர்பிளே ஓவர்களில் அவர் ஆடியவிதம் சிறப்பாக இருந்தது. இன்னும் சில போட்டிகள் ஷார்ஜாவில் இருப்பதால் இனியும் இந்த அதிரடியை நீங்கள் பார்க்கலாம் என்று வெற்றி குறித்து அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
