பஞ்சாப் அணியையும் சேர்த்து தொடரில் இருந்து வெளியேற்றியது சென்னை அணி.!
பஞ்சாப் அணியையும் சேர்த்து தொடரில் இருந்து வெளியேற்றியது சென்னை அணி.!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரின் கடைசி சூப்பர் சன்டேவான நேற்று முதல் போட்டி அபுதாபு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி ஐபிஎல் தொடரின் 53வநு லீக் போட்டியாக நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியை பொருத்தவரையில் சென்னை அணி ஏற்கனவே தொடரைவிட்டு வெளியேறிய நிலையில் ஆறுதல் வெற்றியே நோக்கி விளையாடியது. ஆனால் பஞ்சாப் அணிக்கு இது மிகவும முக்கியமான போட்டி. இந்த போட்டியில் வென்றால் தான் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு என்ற நிலையில் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் அணியில் மயாங்க் அகர்வால் மற்றும் கே.எல் ராகுல் களம் இறங்கினர்.
இந்த ஜோடி நிலைத்து விளையாடும் என நினைக்கையில் மாயங்க் அகர்வால் 26 ரன்னில் அவுட் ஆக அடுத்து கே.எல் ராகுல் 29 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த கெய்ல் சென்னை அணியின் பந்து வீச்சில் தடுமாற பஞ்சாப் அணி மோசமான நிலைக்கு சென்றது. கெய்ல் 12 ரன்னில் அவுட் ஆக அடுத்து வந்த பூரன் 2 ரன்னில் வெளியேற பின்னர் வந்த ஹூடா நிலைத்து விளையாடினார். கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ஹூடா அரைசதம் வீளாச பஞ்சாப் அணி 153 ரன்கள் சேர்த்தது.
பின்னர் விளையாடிய சென்னை அணியில் தொடக்கம் சிறப்பாக அமைந்ததால் சென்னை அணியின் வேகத்தை பஞ்சாப் அணியால் தடுக்க முடியவில்லை. அதிரடியாக விளையாடிய பாப் டுப் ப்ளஸிஸ் 48 ரன்களில் அவுட் ஆக ரூத்ராஜ் 62 ரன்களும் ராய்டு 30 ரன்கள் அடிக்க சென்னை அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
