பெங்களுரு அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்தை தக்கவைத்து டெல்லி அணி.!
பெங்களுரு அணியை வீழ்த்தி இரண்டாவது இடத்தை தக்கவைத்து டெல்லி அணி.!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி காரணம் இந்த போட்டியில் வெல்லும் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் தோல்வி அடையும் அணி தொடரை விட்ட வெளியேற கூட வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த போட்டியில் வெல்ல இரு அணிகளும் போராட்டினர். டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர் படிக்கல் அற்புதமாக விளையாடி அரைசதம் வீளாச பின்னர் விளையாடிய கேப்டன் கோலி 29 ரன்களும் டிவில்லியர்ஸ் 35 ரன்களும் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் பெங்களுரு அணி 153 ரன்கள் அடித்தது.
பின்னர் விளையாடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ப்ரித்திவ் ஷா 9 ரன்னில் வெளியேற அதன் பின்னர் ஷிகார் தவண் மற்றும் ராஹனே இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். தவண் அரைசதம் வீளாச டெல்லி அணி வெற்றியை நோக்கி சென்றது. தவண் 53 ரன்னில் அவுட் ஆக ராஹனே அரைசதம் வீளாசினார். பின்னர் வந்த ஸ்டோனிஸ் மற்றும் பன்ட் போட்டியை முடித்துவைக்க டெல்லி அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
