டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய வீராட் கோலி.!
டெல்லி அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு பேசிய வீராட் கோலி.!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமான போட்டி காரணம் இந்த போட்டியில் வெல்லும் அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் தோல்வி அடையும் அணி தொடரை விட்ட வெளியேற கூட வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த போட்டியில் வெல்ல இரு அணிகளும் போராட்டினர். டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர் படிக்கல் அற்புதமாக விளையாடி அரைசதம் வீளாச பின்னர் விளையாடிய கேப்டன் கோலி 29 ரன்களும் டிவில்லியர்ஸ் 35 ரன்களும் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் பெங்களுரு அணி 153 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய டெல்லி அணியில் ஷிகர் தவண் மற்றும் ராஹனே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி அரைசதம் வீளாச டெல்லி அணி எளிதில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் பெங்களுரு அணி தோல்வி அடைந்தாலும் பிளே ஆப்ஸ் செல்வதை உறுதி செய்தது. இதை தொடர்ந்து இந்த போட்டியின் தோல்வி குறித்து கேப்டன் கோலி போட்டியின் முடிவில் பேசினார். அவர் கூறியதாவது: நாங்கள் இந்த தொடர் முழுவதும் சிறப்பாகவே விளையாடினோம். பந்துவீச்சில் சிறப்பாகவே செயல்பட்டோம், பேட்டிங்கில் வெற்றிக்கு போதுமான ரன்கள் குவிக்க தவறிவிட்டோம். நாங்கள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டோம், இனி இறுதி போட்டிக்கு செல்வதற்கு இரண்டு போட்டிகள் மட்டுமே எங்களுக்கு உள்ளது. ப்ளே ஆஃப் சுற்றுகளில் எங்கள் தவறுகளை சரி செய்து கொண்டு மிக சிறப்பாக விளையாடுவோம்" என்றார்.
