அடுத்த சீசனில் இதை செய்தே ஆக வேண்டும் தோனி என கவாஸ்கர் அறிவுறை.!
அடுத்த சீசனில் இதை செய்தே ஆக வேண்டும் தோனி என கவாஸ்கர் அறிவுறை.!

By : Kathir Webdesk
ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப்ஸ் கூட செல்லாமல் வெளியேறும் நிலைக்கு சென்றுள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி மிகவும் மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவியது. இதற்கு காரணமாக சென்னை அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா இல்லாதது அதே போன்று ஹர்பஜன் சிங் போன்ற வீரர்களும் தொடரில் இருந்து விலகியது. வாட்சன் பிராவோ போன்ற வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தாதது என பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால் அணியின் கேப்டன் தோனியும் இந்த சீசனில் மிகபெரிய அளவில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தாதும் ஒர் காரணம். ஆம் 2018 ஆண்டு தோனி 400+ ரன்களை அடித்து இருந்தார். அந்த சீசனில் சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால் இந்த சீசனில் 200 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இந்த சீசன் முழுவதும் மோசமான பேட்டிங்கை செய்துள்ளார் தோனி.
இந்நிலையில் முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தோனிக்கு அறிவுறை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: அப்படி ஆடினால் தோனியால் சமரசம் இல்லாமல் குறைந்தது 400 ரன்கள் அடிக்க முடியும் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஒவ்வொரு பெரிய விஷயத்திலும் பல மிகச் சிறிய விஷயங்கள் இருக்கும். தோனி போதுமான அளவிற்கு உள்ளூர் போட்டிகளில் ஆடவில்லை.
கண்டிப்பாக அதில் விளையாட வேண்டும் ஆனால் உள்ளூர் போட்டிகளில் பெரிதாக அவரால் விளையாட முடியாது. அழுத்தம் அதிகமான போட்டிகளில் தோனி கண்டிப்பாக ஆடி தன்னைப் பழக்கிக் கொள்ள வேண்டும். இப்பயிற்சியில் பெரிதாக நெருக்கடி இருக்காது இதன் காரணமாக குறைந்தபட்ச உள்ளூர் போட்டிகளில் அவர் ஆட வேண்டும். அப்படிச் செய்தால் கண்டிப்பாக தோனியால் 400 ரன்கள் அடிக்க முடியும் என்று தெரிவித்திருக்கின்றார்.
