லங்கா பிரிமியர் தொடரில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா.!
லங்கா பிரிமியர் தொடரில் பங்கேற்க வந்த பாகிஸ்தான் வீரருக்கு கொரோனா.!

By : Pravin kumar
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று பிரிமியர் லீக் டி-20 தொடரை இலங்கை அணி இந்தாண்டு தொடங்கி உள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த புதிய தொடரை கடந்த ஜூன் மாதத்தில் நடத்த திட்டமிட்ட நிலையில் கொரோனா தொற்று காரணமாக இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இலங்கையில் இந்த தொடரை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிற்கு பிறகு இங்கிலாந்தில் சர்வதேச போட்டியில் நடைபெற்றது. அதன் பின்னர் ஐபிஎல் போன்ற பெரிய தொடர்கள் நடைபெற்ற நிலையில் லாங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை அணி முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர் சோயில் தன்வீர் இலங்கை வந்த நிலையில் அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பறிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் இந்த லாங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாடுவது சந்தேகம் தான் என்ற நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அறிமுக பாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.
அந்த பாடல் தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ள கூடுதல் சிறப்பு. லாங்கா பிரிமியர் லீக் தொடர் 30 லீக் போட்டிகளை கொண்ட சிறிய தொடராக நடைபெற உள்ளது. ஐந்து அணிகளை கொண்டு நடைபெற உள்ளது.
