Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய வீரர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்! ஏன் தெரியுமா?

இந்திய வீரர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான்! ஏன் தெரியுமா?

ThangaveluBy : Thangavelu

  |  24 July 2022 1:22 AM GMT

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று (ஜூலை 22) நடைபெற்றது.

இப்போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஷிகர் தவான் தேர்வானார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 10 என்கின்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில், முதல்நாள் போட்டி முடிவடைந்த நிலையில் இந்திய வீரர்களின் உடை மாற்றும் அறையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரைன் லாரா இந்திய வீரர்களை சந்தித்து உரையாடினார். இந்த வீடியோவை பி.சி.சி.ஐ., தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: இந்தியா டிரஸ்ஸிங் ரூமுக்கு யார் வந்தார் என்று சற்று பாருங்கள். ஜாம்பவான் லாரா! என்றும் அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story