Kathir News
Begin typing your search above and press return to search.

காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி.!

காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி.!

காதலியை கரம்பிடித்த கிரிக்கெட் வீரர் வருண் சக்ரவர்த்தி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Dec 2020 1:30 PM GMT

இந்திய அணிக்கு சமீபத்தில் தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி தனது காதலியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி, சிறப்பாக பந்து வீசியதால் இந்திய டி20 அணிக்குத் தேர்வானார் வருண் சக்ரவர்த்தி. எனினும் காயம் காரணமாக டி20 தொடரிலிருந்து விலிகியுள்ளார்.

இந்நிலையில், தனது காதலி நேஹாவைத் திருமணம் செய்துள்ளார் வருண் சக்ரவர்த்தி. கொரோனா தொற்று காரணமாக நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.

வருண் சக்ரவர்த்தி திருமணம் பற்றிய தகவலை கிரிக்கெட் வீரர் அருண் கார்த்தி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். சமூக வலைத்தளங்களில் வருண் & நேஹா திருமணப் புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகியுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News