#IPL #Breaking - பரபரப்பு போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்ற டெல்லி!
#IPL #Breaking - பரபரப்பு போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்ற டெல்லி!

By : Kathir Webdesk
கடந்த இரண்டு மாதமாக நடைபெற்று வந்த ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் கிட்டத்தட்ட இறுதி நிலையை தற்போது எட்டியுள்ளது.
இன்று நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியும் டெல்லி அணியும் மோதின.
முதலில் பேட் செய்த டெல்லி அணி சிறப்பாக விளையாடி 189 ரன்களை அடித்தனர். அதிகபட்சமாக ஷிகர் திவான் 78 ரன்களை அடித்தார்.
பிறகு 190 இலக்கை நோக்கி பேட் செய்த ஹைதராபாத் தொடக்கத்தில் இருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது.
ஒரு கட்டத்தில் வில்லியம்சன் அடித்து ஆட, வெற்றி பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தது.
20 ஓவர் முடிவில் 172 ரன்களை மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை ஹைதராபாத் அணி பறிகொடுத்தது. அதிகபட்சமாக வில்லியம்சம் 67 ரன்களை அடித்தார்.
செவ்வய்க்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை அணியும் டெல்லி அணியும் பலப்பரிட்சை செய்யும். டெல்லி அணி முதன்முறையாக IPL இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
