சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த இரண்டு வீரர்களை எடுக்க தோனி முடிவு.!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த இரண்டு வீரர்களை எடுக்க தோனி முடிவு.!

By : Pravin kumar
2021ம் ஆண்டு நடைபெற இருக்கும் 14வது ஐபிஎல் சீசன் மே மாதம் நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. எனவே இந்த 14வது ஐபிஎல் சீசனுக்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் சீசனின் ஏலம் வருகின்ற பிப்ரவரி மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால் அனைத்து அணிகளும் தங்களது அணியில் தக்கவைத்துக் கொள்ளும் மற்றும் வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேதர் ஜாதவ், முரளிவிஜய், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, மோனு சிங், ஷேன் வாட்சன் ஆகியோரை மட்டும் நீக்கப்பட்டு மற்ற அனைத்து வீர்ரகளையும் தக்கவைத்துக் கொண்டது.இதில் அதிரடி பேட்ஸ்மேனான ஷேன் வாட்சன் தற்போது ஓய்வு பெற்று விட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், பிராவோ மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை ஆல்ரவுண்டராக தக்கவைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ராபின் உத்தப்பாவை சென்னை அணி வாங்கி இருக்கிறது.

இந்நிலையில், பஞ்சாப் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் மோசமான ஆட்டத்தால் தங்களது அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களையும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம் எஸ் தோனி வருகின்ற ஐபிஎல் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்வதாக பேசப்படுகிறது. இதன்மூலம் சென்னை அணியின் பேட்டிங் பலமாக வாய்ப்பு இருக்கிறது.
