தோனியின் ட்விட்டர் பக்கத்தில் இப்படி ஒரு மாற்றமா ! அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் !
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் பக்கத்தில், அதிகாரப்பூர்வ பக்கம் என்பதற்கான புளு ஸ்டிக் குறீயீட்டை நீக்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம். இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒரு சிலர் மட்டுமே உலகளவில் ரசிகர்களை வைத்துள்ளனர். அதில் முதல் இடத்தில் மகேந்திர சிங் தோனி இடம் பெற்று வருகிறார் என்றே சொல்லலாம்.
By : Thangavelu

இவரது ஆட்டம் அனைவரையும் ஈர்த்துள்ளது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். இதனிடையே இவர் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் லட்சக்கணக்கானோர்கள் உள்ளனர். அந்த வகையில், பேஸ்புக் பக்கத்தில் 2.6 கோடி பேர் தோனியை பின்பற்றி வருகின்றனர்.
அதே போன்று இன்ஸ்டகிராமில் 3.45 கோடி பேரும், ட்விட்டரில் 80.3 லட்சம் பேரும் பின்பற்றி வருகின்றனர். தோனி சமூக வலைதளம் மூலமாக ஒரு படம் மற்றும் கருத்தை பதிவிட்டால் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து புளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. சமூகத்தில் மிகவும் பிரபலமானவர்களுக்கு அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை உணர்த்தும் வகையில் புளு டிக் குறீயீட்டை ட்விட்டர் நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தோனியின் புளு டிக் குறீயீட்டை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source: Twiter
Image Courtesy:The Economics Times