Kathir News
Begin typing your search above and press return to search.

டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு! இங்கிலாந்து வீரர் மொயின் அலி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி. இடது கை பேட்ஸ்மேனும், வலது கை சுழற்பந்து வீச்சாளருமான மொயின் அலி, ஷார்டர் பார்மேட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியுள்ளது.

டெஸ்ட் போட்டிக்கு ஓய்வு! இங்கிலாந்து வீரர் மொயின் அலி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ThangaveluBy : Thangavelu

  |  27 Sep 2021 8:28 AM GMT

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி. இடது கை பேட்ஸ்மேனும், வலது கை சுழற்பந்து வீச்சாளருமான மொயின் அலி, ஷார்டர் பார்மேட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே மொயின் அலி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனக்கு தற்போது 34 வயதாகிறது. என்னால் முடிந்த வரையில் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். மற்ற பார்மெட் கிரிக்கெட்டை காட்டிலும் டெஸ்ட் போட்டி மிகவும் சிறந்தது. நான் இதுவரை டெஸ்ட் போட்டியை அனுபவித்தே விளையாடியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் ஐபிஎல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மொயின் அலியின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இருந்தபோதிலும் டெஸ்ட் போட்டிக்கு மட்டுமே ஓய்வு அளித்துள்ளார் மற்ற போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Puthiyathalamurai

Image Courtesy: Malaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News