இந்தியா - இங்கிலாந்து தொடருக்கான அட்டவனையை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.!
இந்தியா - இங்கிலாந்து தொடருக்கான அட்டவனையை வெளியிட்டது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.!

By : Pravin kumar
தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இந்திய அணி அங்கு டிசம்பர் மற்றும் ஐனவரி மாதம் முழுவதும் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணி அடுத்த ஆண்டு பங்கேற்க உள்ள முக்கிய தொடர் பற்றி அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளது.கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியா மோசமாக தோல்வி அடைந்த நிலையில் இது இந்திய அணிக்கு முக்கியமான தொடராக கருதப்படுகிறது.
இந்த தொடர் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி தொடங்கி செப்டம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் முன்பாக இந்திய அணி எப்ரல் மற்றும மே மாதங்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளது.
அதன் பின்னர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் அந்த தொடர் முடிந்ததும் ஆசிய கோப்பை தொடர் மற்றும் ஜிம்பாவே தொடர்கள் உள்ளன. இந்த தொடர்கள் முடிவடைந்ததும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் என எதிர்பாக்கப்படுகின்றது.
ஆஸ்திரேலிய தொடர் முடிந்த பின் இந்திய அணி இடைவிடாமல் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளது. லாக்டவுனால் ஆடாமல் விடப்பட்ட கிரிக்கெட் தொடர்களை அனைத்தையும் ஆடி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இந்திய அணி.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா சென்றவுடன் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது இந்திய அணி. இந்தியா வரும் இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட், நான்கு ஒருநாள் மற்றும் நான்கு டி20 போட்டிகளில் மோத உள்ளது. இந்த தொடர் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
