Kathir News
Begin typing your search above and press return to search.

"இது வேற லெவல் !!! " 8வது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கால்பந்து அணி !

இது வேற லெவல் !!!  8வது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய கால்பந்து அணி !

DhivakarBy : Dhivakar

  |  17 Oct 2021 6:55 AM GMT

8வது முறையாக தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்திய கால்பந்து அணி பெற்றுள்ளது, இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாலத்தீவில், 5 அணிகள் இடையிலான 13-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நேபாளத்தை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணி இந்த கோப்பையை வெல்வது இது 8-வது முறையாகும்.

Image: Twitter

Maalaimalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News