இந்திய அணி டெஸ்ட் தொடர் 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடையும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கருத்து.!
இந்திய அணி டெஸ்ட் தொடர் 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடையும் என ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் கருத்து.!

By : Pravin kumar
இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. பின்னர் நடைபெற்ற டி-30 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. அதை தொடர்ந்து இரு அணி வீரர்களும் நான்கு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் சந்திக்க உள்ளனர். இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலேட் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெற உள்ளது. இந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விளையாடவில்லை. இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் கோலி நாடு திரும்புகிறார்.

இந்த தொடரில் பல மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மிட்செல் வாக்கன் கருத்து ஒன்றை கூறியுள்ளார். அவர் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 0-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடையும் என கூறியுள்ளார். காரணம் ஆஸ்திரேலியா அணி வலுவான அணியாக இருப்பதாலும் இந்திய அணியில் கோலி வெளியேறுவதாலும் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
