ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் கார் விபத்தில் உயிரிழப்பு: ரசிகர்கள் அதிர்ச்சி!
By : Thangavelu
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் 46, நேற்று இரவு காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து குயின்ஸ்லேண்ட் காவல் அதிகாரிகள் கூறியதாவது: சைமண்ட்சின் கார் ஹெர்வி ரேஞ்ச் பகுதியில் வந்தபோது, சாலையை தாண்டி விபத்தில் சிக்கியது. அந்த காரில் ஒருவர் மட்டுமே பயணம் செய்தார். அவரை மீட்டு ஆம்புனல்ஸ் மூலமாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பரிதாபமாக உயிரிழந்தார்.
சைமண்ட்சுக்கு லாரா என்கின்ற மனைவியும், குளோ மற்றும் பில்லி ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளது. அவர் இதுவரையில் 198 ஒரு நாள் போட்டியில் விளையாடி 5088 ரன்களை எடுத்துள்ளார். அது மட்டுமின்றி 133 விக்கெட்டையும் எடுத்துள்ளார். இரவது திடீர் மரணம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source: Daily Thanthi
Image Courtesy: Hindustan Times