இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாக்கு தான் வெற்றி வாய்ப்பு பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து.!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாக்கு தான் வெற்றி வாய்ப்பு பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து.!
By : Pravin kumar
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் முடித்திருக்கும் இந்திய அணியும் இலங்கையில் சுற்றுப்பயணம் முடித்திருக்கும் இங்கிலாந்து அணியும் அடுத்தாக மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாட இருக்கிறது.
பிப்ரவரி மாதம் 5ம் தேதியிலிருந்து இந்த இரு அணிகளுக்கிடையேயான தொடர்கள் தொடங்குகிறது. இந்த இரு அணிகளும் முதலில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்திலும் கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில்பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, சமீபமாக நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2-1 என வெற்றி பெற்றது.பல முக்கியமான அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் இளம் வீரர்களின் திறமையான செயல்பாட்டால் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹார்திக் பாண்டியா போன்ற திறமையான வீரர்கள் பலரும் விளையாட உள்ளனர்.இது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரும் நெருக்கடியை கொடுக்கும் என்று அவர் கூறினார்.
மேலும்அவர் கூறியதாவது இரு அணிகளிலும் டாப் ஆர்டர் மிகவும் சிறப்பாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.இங்கிலாந்து அணி வீரர்களால் சுழற்பந்து சமாளிப்பது சற்று சவாலாகவே இருக்கிறது இந்நிலையில் அவர்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது அவர்களுக்கு இன்னும் சிரமமாக அமையும்.
சமீபமாக நடந்து முடிந்த இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கை அணியை வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது, இருந்தபோதும் இந்தியாவிடம் அந்த வித்தை எல்லாம் செல்லாது. இந்திய அணியில் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளிப்பதற்கு ஏற்ற வீரர்கள் உள்ளனர் இதன் காரணமாக இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் கூறினார்.