Begin typing your search above and press return to search.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரெய்னா மற்றும் உத்தப்பாவின் வருகை பலம் தான் கம்பீர் கருத்து.!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரெய்னா மற்றும் உத்தப்பாவின் வருகை பலம் தான் கம்பீர் கருத்து.!
By : Pravin kumar
2021 ஐபிஎல் போட்டி வருகிற மே மாதம் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் அதற்கான தயாரிப்பு நிலையில் அனைத்து அணிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 18 சென்னையில் நடக்க உள்ள ஏலத்தில் அனைத்து அணிகளும் தனக்கு தேவையான வீரர்களை எடுப்பதற்காக யோசனை செய்து கொண்டுள்ளனர்.
கடந்தஆண்டு தோனி தலைமையிலான சென்னை அணி யாரும் எதிர்பார்த்திராத வகையில் மிக மோசமாக விளையாடி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறவில்லை, குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அனுபவ வீரர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.
இந்நிலையில் 2020 ஐபிஎல் போட்டியோடு சென்னை அணியின் முக்கிய வீரர்களாக திகழ்ந்த ஹர்பஜன் சிங், சாவ்லா மற்றும் கேதர் ஜாதவ் போன்ற அனுபவ வீரர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர், மேலும் அந்த அணியின் முக்கிய வீரராக திகழ்ந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வாட்சன் ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில் அந்த அணிக்கு பேக்கப் வீரர்கள் தேவை உள்ளனர்.
இந்நிலையில் சென்னை அணி ஆல்ரவுண்டர்களை தனது அணியில் சேர்ப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது.இதுபற்றிஇதுபற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனுமான கௌதம் கம்பீர் கூறியதாவது, சென்னை அணியில் அதிகமான வீரர்கள் தேர்ந்தெடுப்பதற்கு தேவையில்லை ஏனென்றால் அந்த அணியின் கோர் அணி மிகவும் வலுவாக உள்ளது, தோனி தலைமையிலான சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னைக்கு திரும்பியதும் மேலும் அனுபவ வீரரான ராபின் உத்தப்பா சென்னை அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்துவிட்டது இதனால் சென்னை அணி அதிகப்படியான வீரர்களை தேர்ந்தெடுக்க தேவையில்லை என்று கூறினார்.
சுரேஷ் ரெய்னா மற்றும் ராபின் உத்தப்பா வின் வருகையால் சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் மிக வலுவாக அமைந்துவிட்டது, மேலும் சென்னை அணி தனக்குத் தேவைப்படும் பேக்கப் வீரர்களை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story