Kathir News
Begin typing your search above and press return to search.

வீராட் கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை இந்திய கேப்டனாக அறிவிக்க வேண்டும் - கவுதம் கம்பீர் கருத்து.!

வீராட் கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை இந்திய கேப்டனாக அறிவிக்க வேண்டும் - கவுதம் கம்பீர் கருத்து.!

வீராட் கோலியை நீக்கிவிட்டு ரோஹித் சர்மாவை இந்திய கேப்டனாக அறிவிக்க வேண்டும் - கவுதம் கம்பீர் கருத்து.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  13 Nov 2020 8:27 PM IST

ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுபயணத்திற்காக சென்றுள்ளது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான வீராட் கோலியை கேப்டன் பதவில் இருந்து நிக்க வேண்டும் என்ற எதிர்ப்பு குறல் எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரு முறை கூட கோலி தலைமையில் ஆர்சிபி அணி கோப்பை வெல்லாத நிலையில் ஆர்சிபி அணியின் கேப்டன் பதவில் இருந்து நிக்க வேண்டும் என கவுதம் கம்பீர் கூறிய நிலையில் தற்பொழுது இந்திய அணியின் கேப்டன் பதவியையும் பறிக்க வேண்டும் என கூறியுள்ளார். அவருக்கு பதிலாக ரோஹித் சர்மாவை இந்திய கேப்டனாக நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரை ரோஹித் சர்மா ஐந்தாவது முறையாக வென்று அசத்திய நிலையில் அவருக்கு இந்திய அணியை தலைமை வகிக்கும் தகுதி உண்டு என குறல் எழுந்துள்ளது. வீராட் கோலி தலைமையில் இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட இந்திய அணி வெல்லாத நிலையை உள்ள நிலையில் என் ரோஹித் சர்மாவை கேப்டனாக மாற்ற கூடாது என கூறுகின்றனர்.

இது குறித்து கம்பீர் பேசுகையில், “இந்தியாவுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவில்லை என்றால் இழப்பு அவருக்கு இல்லை. ஒருவர் நல்ல கேப்டன் என்பதை எந்த அளவுகோளை வைத்து முடிவு செய்வீர்கள் ? அப்படி பார்த்தால் ரோகித் சர்மா 5 முறை ஐபிஎல் கோப்பையை பெற்றுத் தந்துள்ளார். தோனியை இப்போதும் மிகச் சிறந்த கேப்டன் என ஏன் நாம் சொல்கிறோம்” என்றார்.

ரோஹித் சர்மாவை கேப்டனாக்கவில்லை என்றால் இறுதிவரை அணியின் வெற்றிக்கு உதவும் நபராகவே இருப்பார். அதனால்தான் சொல்கிறேன் இந்திய டெஸ்ட் அணிக்கு ரோகித்தை கேப்டனாக்க வேண்டும். ரோகித் சர்மா ஏற்கெனவே தன்னுடைய கேப்டன்சி திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். அதனால் கோலி சிறந்த கேப்டன் இல்லை என கூறவில்லை. ஆனால் ரோகித் சர்மா அவரைவிடவும் திறமையாக செயல்படுவதாக நான் கருதுகிறேன்” என்றார் காம்பீர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News