ரேபிட் செஸ் போட்டி: இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் முதலிடம்!
By : Thangavelu
போலாந்த் நாட்டில் நடைபெற்று வரும் ரேபிட் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
ரேபிட் மற்றும் பிளிட்ஷ் செஸ் போட்டி 2022 போலந்து நாட்டில் நடந்து வருகிறது. மொத்தம் 10 வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்று ரவுண்ட் ராபின் முறையில் விளையாடி வருகின்றனர். மொத்தம் இதில் ஒன்பது சுற்றுகளின் முடிவில் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ள விஸ்வநாதன் ஆனந்த் ரேபிட் செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்தார்.
இதில் 6 போட்டியில் வெற்றி இரண்டு டிரா, ஒரு தோல்வி என்று 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் தற்போது பிளிட்ஷ் செஸ் தொடங்க உள்ளது. இதிலும் அவர் வெற்றி பெறுவார் என்று அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu