Kathir News
Begin typing your search above and press return to search.

விரைவில் அரசியல் கட்சியில் இணைகிறார் ஹர்பஜன் சிங்?

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் அரசியலில் நுழைவதாக கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதே பேச்சுகள் அடிப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி கடந்த டிசம்பர் 11ம் தேதி பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதனை அவர் அப்போது மறுத்திருந்தார்.

விரைவில் அரசியல் கட்சியில் இணைகிறார் ஹர்பஜன் சிங்?

ThangaveluBy : Thangavelu

  |  25 Dec 2021 1:43 PM GMT

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்பஜன் சிங் அரசியலில் நுழைவதாக கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போதே பேச்சுகள் அடிப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி கடந்த டிசம்பர் 11ம் தேதி பாஜகவில் இணைய உள்ளார் என்ற தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. அதனை அவர் அப்போது மறுத்திருந்தார்.

இந்நிலையில், அரசியல் விவகாரம் தொடர்பாக ஹர்பஜன் சிங் கூறயிருப்பதாவது: நான் அனைத்து கட்சியுடனும் நட்புடன் பழகியிருக்கிறேன். அனைவரையும் நன்றாக தெரியும். மேலும், நான் கட்சியில் இணைவதாக இருந்தால் முன்கூட்டியே தெரிவித்துவிடுவேன்

அதிலும் நான் பஞ்சாப் மாநிலத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பது நீண்டநாள் எண்ணும் கூட. அதனை அரசியல் அல்லது மாற்று வழிகளிலும் மேற்கொள்ளலாம். இன்னும் இது பற்றி முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News