"சேப்பாக்கம் நம்ம பக்கம்" சென்னை டெஸ்ட் போட்டி குறித்து ஹர்பஜன் கருத்து.!
"சேப்பாக்கம் நம்ம பக்கம்" சென்னை டெஸ்ட் போட்டி குறித்து ஹர்பஜன் கருத்து.!
By : Pravin kumar
இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா முதல் இன்னிங்சில் 161 ரன்களும் ரஹானே மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் அரைசதம் அடிக்க இந்திய அணி 329 ரன்கள் எடுத்தது.முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி இந்தியர்களின் சுழல் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து, 134 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 2 விக்கெடுகளையும் கைப்பற்றினர்.
195 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணி ஒருபுறம் விக்கெட்கள் சரிந்தாலும் ரன்களை அதிகபட்சமாக விராட்கோலி 62 ரன்களும், அஷ்வின் ஐந்தாவது முறையாக சதம் விளாசி 106 ரன்களும் எடுத்திருந்தனர். இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்து, 481 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.482 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி இம்முறையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்குதலை தாங்க முடியாமல் விக்கெட்டுக்களை இழந்து வந்தது. இந்த போட்டியில் அறிமுகமான அக்சர் பட்டேல் தனது முதல் 5 விக்கெட்டுகளை டெஸ்ட் அரங்கில் பதிவு செய்தார்.
அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.இறுதியாக, 164 ரன்களுக்கு இங்கிலாந்து அணி ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றதுடன், 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-1 என சமன் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வெற்றி குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங் " சேப்பாக்கம் எப்போதும் நம்ம பக்கம் தான் அது இந்திய அணிக்கு காட்டியதில்லை மறுபக்கம் தான் என் தமிழ் மக்களை மைதானத்தில் காண்பதில் மகிழ்ச்சி என பதிவிட்டுள்ளார்.