IPL கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தான் ரெடி: இந்திய கிரிக்கெட் வீரர் பேட்டி!
வரும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயார் என்று இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹர் பேட்டி அளித்து இருக்கிறார்.
By : Bharathi Latha
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் தன் விளையாட தயாராக இருப்பதாக காயத்தில் இருந்து மீண்டு வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளரான தீபக் தற்போது பேட்டி அளித்து இருக்கிறார். குறிப்பாக ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வேகப்பந்து பேச்சாளர் தீபக் காயம் காரணமாக கடந்த ஆண்டு விளையாடவில்லை குறிப்பாக கடந்த ஆண்டு இவர் 14 கோடி ஏலத்தில் எடுக்கப்பட்டு அவர் இல்லாதது சென்னை அணியின் வெற்றியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் சென்னை அணி ஒன்பதாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அத்துடன் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இருந்து காயம் காரணமாக அவர் விலக நேரிட்டது. ஆனால் முகமது சிராஜ், உம்ராஜ் ஆகியோர் வேகபந்து வீச்சாளர்களின் வருகைகள் இந்திய அணியின் தீபக் மீண்டும் இடம் கிடைக்குமா? என்ற ஒரு கேள்வியும் இருக்கிறது. எனவே காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ள தீபக் மார்ச் 3ஆம் தேதி தொடங்கும் 16வது ஐ.பி.எல் கிரிக்கெட்டில் களம் இறங்க தான் தயாராக இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.
குறிப்பாக அவர் பேட்டியின் போது கூறுகையில், "உடல் தகுதியை எட்டுவதற்கு இரண்டு மூன்று மாதங்களாக நான் கடுமையாக உழைத்து இருக்கிறேன். இப்போதும் முழு உடல் தகுதியுடன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் நன்றான விளையாட தயாராக இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார். முதுகில் காயம், தொடையில் தசை நாரில் பிளவு என்று இரண்டு விதமான காய்களால் மிகவும் அவதிப்பட்டதாகவும், இரண்டுமே மிகப்பெரிய காயங்கள் இதனால்தான் மாதகணக்கில் என்னால் விளையாட முடியாமல் போய்விட்டதாகவும் எந்த விதமான குறிப்பாக வேக பந்துவீச்சாளர்கள் காயத்திற்கு பிறகு அணிக்கு திரும்பும் போது பழைய நிலை எட்டுவதற்கு கொஞ்சம் நேரம் ஆகும்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
Input & Image courtesy: The Hindu