இந்திய அணியை எப்படி வீழ்த்துவது என்பது எனக்கு தெரியும் மீரட்டும் ஆஸ்திரேலியா வீரர்.!
இந்திய அணியை எப்படி வீழ்த்துவது என்பது எனக்கு தெரியும் மீரட்டும் ஆஸ்திரேலியா வீரர்.!

By : Pravin kumar
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடந்து முடித்து விட்டது. இதில் ஒரு நாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும் டி20 தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றி விட்டனர்.
மொத்தமாக எடுத்து பார்த்தால் 6 போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்திய அணியும் மூன்று போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து டெஸ்ட் தொடர் வரும் 17ஆம் தேதி தொடங்க போகிறது. அதிலும் இந்த முதல் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக திட்டமிடப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் இந்தியா 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சென்று விளையாடியபோது டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றி சாதனைப் படைத்தது. இதற்கு முக்கியமாக அந்த அணியில் முக்கிய அங்கமாக இருந்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் இல்லை.

இந்நிலையில் இந்திய வீரர்களுக்காக ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் வைத்திருக்கிறோம் என்று பேசியிருக்கிறார் அந்த அணியின் சீனியர் பந்துவீச்சாளர் நேதன் லையன். அவர் கூறுகையில் “கடந்த தொடரில் இந்திய வீரர்கள் எங்களுக்கு எதிராக எப்படிப்பட்ட உத்திகளைப் உபயோகித்து விளையாடினார்கள் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அது பற்றி நாங்கள் அதிகமாக விவாதித்து இருக்கிறோம். இதன் காரணமாக புதிய தோற்றத்துடன் களம் இறங்கப் போகிறோம்.

அதே நேரத்தில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறேன் என்று என்னால் வெளிப்படையாகக் கூற முடியாது. ஆனால் இந்த முறை நாங்கள் மாஸ்டர் ஸ்டோக் செய்யப்போகிறோம். ஆஸ்திரேலி அணி இரண்டு வருடத்திற்கு முன்னர் இருந்ததைவிட தற்போது சிறந்த அணியாக இருக்கிறது. கொஞ்சம் அதிகமாக பயிற்சி செய்திருக்கிறோம். களத்தில் இறங்க தயாராகி விட்டோம்” என்று தெரிவித்திருக்கிறார் நேதன் லையன்.
