Kathir News
Begin typing your search above and press return to search.

தோனி கேப்டன்ஷியின் கீழ் விளையாட விரும்புகிறேன் வில்லியம்சன் அசத்தல் பதில்!

தோனி கேப்டன்ஷியின் கீழ் விளையாட விரும்புகிறேன் வில்லியம்சன் அசத்தல் பதில்!

தோனி கேப்டன்ஷியின் கீழ் விளையாட விரும்புகிறேன் வில்லியம்சன் அசத்தல் பதில்!

Pravin kumarBy : Pravin kumar

  |  25 Dec 2020 1:46 PM GMT

நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவரின் கீழ் விளையாட வேண்டும் என தனது ஆசையை வெளிபடுத்தி உள்ளார்.


நியூசிலாந்து அணி கொரோனா தொற்றிற்கு பிறகு நியூசிலாந்தில் இரண்டு அணிக்கு எதிராக தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றது. நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு வெஸ்ட் இண்டிஸ் அணி மூன்று டி-20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.

அனைத்து போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் அணி தற்பொழுது நியூசிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது.


மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்திய நிலையில் டி-20 தொடருக்கு பின்னர் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் கேப்டன்ஷிப் மற்றம் அவரின் சிறப்பான பேட்டிங்க் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

அதன் பின்னர் நிங்கள் யார் கேப்டன்ஷியில் விளையாட ஆர்வம் இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த வில்லியம்சன்” : நான் தோனியின் கீழ் விளையாட ஆசைப்படுகிறேன். மேலும் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளவும் அதிகம் விருப்பப்படுகிறேன். கிரிக்கெட்டில் தோனி ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர். அவரது வழியில் செயல்பட நான் விரும்புகிறேன்.

அவரை பார்த்து கேப்டன்ஷிப் எவ்வாறு செய்வது என்பதை கண்டு ஆச்சரியப்பட்டு உள்ளேன். அதனால் தோனியின் கீழே நான் விளையாடவும், அவரிடம் இருந்து கேப்டன்ஷிப்பை கற்றுக் கொள்ளவும் விரும்புகிறேன் என்று வில்லியம்சன் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News