Kathir News
Begin typing your search above and press return to search.

முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய அனைத்து இந்திய வீரர்களுக்கும் அபாரதம் ஐசிசி அதிரடி.!

முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய அனைத்து இந்திய வீரர்களுக்கும் அபாரதம் ஐசிசி அதிரடி.!

முதல் ஒரு நாள் போட்டியில் விளையாடிய அனைத்து இந்திய வீரர்களுக்கும் அபாரதம் ஐசிசி அதிரடி.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  29 Nov 2020 1:29 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார்.

அதன்படி முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் பின்ச் 114 ரன்களையும், ஸ்மித் 105 ரன்களும், டேவிட் வார்னர் 69 ரன்களை குவித்தனர்,

இதன் பின்னர் 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டும் குவித்தது. இதன்மூலம் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் இந்திய வீரர்கள் என அனைவருக்கும் போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவீதம் அபராதத்தை ஐசிசி விதித்துள்ளது ஏனெனில் நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதலில் பந்து வீசிய இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவரை வீசிய முடிக்க முடியாமல் தாமதப்படுத்தி இதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலதாமதமாக ஓவர்களை வீசியதன் காரணமாக விதிக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோ ஓவர் ரேட் விதிமுறை காரணமாக தற்போது கேப்டன் கோலி மட்டுமின்றி இந்த ஆட்டத்தில் விளையாடிய இந்திய வீரர்களின் அனைவரது ஊதியத்திலிருந்தும் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News