விராட் கோலி, தோனிக்கு ஐ.சி.சி., விருது அறிவிப்பு.!
விராட் கோலி, தோனிக்கு ஐ.சி.சி., விருது அறிவிப்பு.!

By : Kathir Webdesk
கடந்த 10 ஆண்டுகளில் ஐ.சி.சி.யி.ன் சிறந்த வீரர் மற்றும் சிறந்த ஒருநாள் வீரர் என்ற விருதுக்கு விராட் கோலியும், ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதுக்கு தோனியும் ஐ.சி.சி.யி.ன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

ஐ.சி.சி., அமைப்பு வருடம் தோறும் சிறந்த வீரர்களுக்கு விருது வழங்கிக் கவுரவித்து வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் உலகக் கோப்பை உள்ளிட்ட 3 கோப்பைகளைப் பெற்றுக் கொடுத்தவருமான பல இளைஞர்களுக்கு முன்னோடியாக உள்ள தோனிக்கு ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதும், இந்திய அணியின் தற்போதைய கேப்டனும் இளைஞர்களின் சிறந்த வீரராக உள்ள விராட் கோலிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஐ.சி.சி.யி.ன் சிறந்த வீரர் மற்றும் சிறந்த ஒரு நாள வீரர் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது அறிவிப்புக்கு ரசிகர்களின் வாழ்த்து மழையில் இருவரும் நனைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
