Kathir News
Begin typing your search above and press return to search.

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பும்ரா சாதனை!

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பும்ரா சாதனை!

ThangaveluBy : Thangavelu

  |  17 March 2022 5:21 AM GMT

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர் மற்றும் ஆல் ரவுண்டர் வீரர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய வீரர்கள் ரோகித் சர்மா 6வது இடத்தையும், விராட் கோலி 9வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மேலும், பந்து வீச்சாளர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வீரர் கம்மின்ஸ் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். இந்திய வீரர்கள் அஸ்வின் 2வது இடத்தை பிடித்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணியை சேர்ந்த ரபாடா 3வது இடத்தை பிடித்துள்ளார். அதே போன்று 4வது இடத்துக்கு பும்ரா முன்னேறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Maalaimalar

Image Courtesy: ESPNcricinfo

Next Story
கதிர் தொகுப்பு
Trending News