நாங்கள் இதை செய்திருந்தால் மும்பை அணியை வீழ்த்தி இருப்போம்- தோல்வி குறித்து ஷ்ரேயஸ் ஐயர்.!
நாங்கள் இதை செய்திருந்தால் மும்பை அணியை வீழ்த்தி இருப்போம்- தோல்வி குறித்து ஷ்ரேயஸ் ஐயர்.!

By : Pravin kumar
ஐபிஎல் 2020 தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப்ஸ் சுற்று போட்டிகள் ஆரம்பம் ஆகி உள்ளனர். இந்நிலையில் பிளே ஆப்ஸ் சுற்றி முதல் போட்டியான குவாலிபையர் 1 போட்டி திட்டமிட்ட படி துபாய் இன்டேர்னேஷ்னல் மைதானத்தில் நடைபெற்றது. புள்ளி பட்டியிலில் முதல் இரண்டு இடங்களை பிடித்து மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது.
முதலில் விளையாடிய மும்பை அணியில் டி காக் 40 ரன்களும் சூரியக்குமார் யாதவ் 51 ரன்களும் சேர்த்து மும்பை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்க இஷன் கிஷன் 55 ரன்களும் ஹர்டிக் பாண்டிய 37 ரன்களும் கடைசி ஓவர்களில் அடித்து கொடுக்க மும்பை அணி 200 ரன்கள் சேர்தது. பின்னர் விளையாடிய டெல்லி அணி மோசமான தொடக்கத்தின் காரணமாக 143 ரன்கள் மட்டுமே அடித்தது. மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் தோல்வி குறித்து கூறியதாவது : எங்கள் அணி குறித்து நானே நெகட்டிவான கருத்துக்களை கூற விரும்பவில்லை. ஆனால் நாங்கள் இன்னும் சிறப்பான மைண்ட் செட் உடன் முன்னேற வேண்டி உள்ளது அவசியம். எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதால் நாங்கள் மீண்டும் வருவோம் என நம்புகிறேன். இந்த போட்டியில் துவக்கத்திலேயே இரு விக்கெட்டுகளை இழந்ததால் எங்களால் அதிலிருந்து மீண்டு வர முடியவில்லை.
