உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றதா?ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிருக்கு இந்தியா கடைசி நிமிடத்தில் தகுதி பெற்று இருக்கிறது.
By : Bharathi Latha
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் இந்தியாவில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. இதனுடைய நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. அதேபோல நியூசிலாந்து இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்றது. கடந்த ஒன்பதாம் தேதி தொடங்கி இந்த போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உள்ளிட்ட இந்த போட்டிக்கு இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் ஆஸ்திரேலிய அணியை வென்றால் இந்தியா நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நுழைய முடியும்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய அணி டிரா அல்லது தோல்வியை கண்டால் இலங்கை அணிக்கு இறுதிப்போட்டி அதிர்ஷ்டம் கிட்டும் என்ற நிலைமை வந்தது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி நகர்ந்ததால் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் இலங்கை மற்றும் நியூசிலாந்து டெஸ்ட் மீது திரும்பி இருக்கிறது. இந்தியா ரசிகர்கள் எதிர்பார்த்த படியாக இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2 விகேட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்தாலும், இந்திய அணி உலக டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு நேரடியாக பங்கேற்க முடியும் என்பது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகமளிக்கும் செய்தியாக அமைந்து இருக்கிறது.
தோல்வி அடைந்த இலங்கை அணி இறுதிப் போட்டி கனவை தற்போது தகர்த்து இருக்கிறது. இனி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி முடிவு டெஸ்ட் சாம்பியன்ஷி புள்ளி பட்டியலில் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது. குறிப்பாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிற்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா நேரடியாக தேர்வாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டெஸ்ட் தொடர் லண்டனில் ஜூன் 7ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Mediyaan