Kathir News
Begin typing your search above and press return to search.

டி20 தரவரிசையில் முதல் இடத்துக்கு வந்த இந்தியா!

டி20 தரவரிசையில் முதல் இடத்துக்கு வந்த இந்தியா!

ThangaveluBy : Thangavelu

  |  21 Feb 2022 6:01 AM GMT

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிக்கனியை பறித்த இந்திய அணி தொடரையும் 30 என்கின்ற கணக்கில் தனது வசமாக்கியது. இந்த வெற்றியால் இந்திய அணி 20 ஓவர் தொடரை 30 என்கின்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. மேலும், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தொடர்ச்சியாக பதிவு செய்த 9வது வெற்றியாகும். முன்னர் ஒருநாள் தொடரையும் இந்தியா 30 என்கின்ற கணக்கில் சொந்தமாக்கியது.

இந்நிலையில், ஐசிசி தற்போது வெளியிட்டுள்ள டி20 அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடத்துக்கு தகுதி பெற்றுள்ளது. 6 ஆண்டுக்கு பின்னர் இந்தியா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் 269 புள்ளிகளுடன் இருந்த இங்கிலாந்து ணியை பின்னுக்கு தள்ளி இந்தியா முதுலிடத்தை பிடித்துள்ளது.

Source: Daily Thanthi

Image Courtesy: Onmanorama

Next Story
கதிர் தொகுப்பு
Trending News