Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இந்திய அணி.!

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இந்திய அணி.!

இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது இந்திய அணி.!
X

Pravin kumarBy : Pravin kumar

  |  26 Feb 2021 7:15 AM GMT

இந்தியா வந்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இன்றைய போட்டி வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, அக்‌ஷர் பட்டேலின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் (11), புஜாரா (0), கோலி (27) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்தாலும், ரோஹித் சர்மா பொறுமையாக விளையாடியதால் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்திருந்தது.இரண்டாம் நாளான இன்றைய ஆட்டத்தின் துவக்கத்தில் இருந்தே இங்கிலாந்து அணியே கையே ஓங்கி இருந்தது.

குறிப்பாக அனைவருக்கும் ஷாக் கொடுக்கும் விதமாக இங்கிலாந்து அணியின் கேப்டனான ஜோ ரூட் பந்துவீச்சில் இந்திய அணியை திணறடித்து வெறும் 6 ஓவரில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதன் மூலம் வெறும் 145 ரன்களுக்கே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (19), ஸ்டோக்ஸ்(25) மற்றும் ஓலி போப் (12) ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன் கூட தாண்டாமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் வெறும் 81 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக அக்‌ஷர் பட்டேல் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 49 மட்டும் எடுத்தால் வெற்றி என்ற எளிய டார்கெட்டை சேஸ் செய்த இந்திய அணியின் துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா மிகச் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிபெறச் செய்தனர் இதில் ரோகித் சர்மா 25 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்தார் மேலும் சுப்மன் கில் 21 பந்துகளுக்கு 15 ரன்கள் அடித்து சிறப்பாக செயல்பட்டனர்.குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேல் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 11 விக்கெட்களை எடுத்ததன் மூலம் மேன் ஆப் தி மேட்ச் பட்டத்தை பெற்று சென்றார். இந்திய அணியின் இந்த சிறப்பான செயல்பாட்டை ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News