இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை டிரா செய்த நியூசி!
கான்பூரில் நடைபெற்ற இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
By : Thangavelu
கான்பூரில் நடைபெற்ற இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இந்தியாவிற்கு நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. அதில் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 345, நியூசிலாந்து 296 ரன்கள் எடுத்திருந்தது. 2வது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 234 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. முதல் இன்னிங்ஸில் 284 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நியூசிலாந்து அணி துவக்கத்தில் தடுமாறியது.
இதனிடையே 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 4 ரன்கள் எடுத்திருந்தது. இன்று நடைபெற்ற 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பவுலர்கள் அசத்தினர். அதன் பின்னர் லதாமை விக்கெட்டாக்கிய அஷ்வின் (418 விக்.,) டெஸ்ட் போட்டில் அதிக விக்கெட்டை வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார். முதல் இரண்டு இடங்களில் கும்ளே (619 விக்.,) கபில் தேவ் (434 விக்.,) உள்ளனர்.
மேலும், ரவிந்திர ஜடேஜா பவுளிங்களில் மிரட்டினார். நியூசிலாந்து சார்பில் சாமர்விலே (36), கேப்டன் வில்லியம்சன் (24) ரன்கள் எடுத்து தாக்குப்பிடித்தனர். மற்றவர்கள் ஏமாற்றியதால் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுக்கு 165 ரன்களுக்கு எடுத்து தினறியது. இந்த நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டம் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar