டி20 கிரிக்கெட்: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி !
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங்கில் இறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. இதில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் 42 பந்தில் 70 ரன்களும், 3வது வீரராக இறங்கிய சாப்சேன் 50 பந்து வீச்சில் 63 ரன்களை சேர்த்தார்.
By : Thangavelu

இந்திய அணியை சேர்ந்த புவனேஷ்வர் குமார் மற்றும் அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டை வீழ்த்தினர். தீபக் சாஹர், முகமது சிராஜ் உள்ளிட்டோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இறங்கிய வீரர் கே.எஸ்.ராகுல் 14 பந்தில் 15 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ரோகித் சர்மாவுடன் சூர்யாகுமார் யாதவ் களம் கண்டார். இந்த ஜோடி அபாரமாக விளையாடினர். ரோகித் சர்மா 36 பந்தில் 48 ரன்களை எடுத்து அரைசதம் போடுகின்ற வாய்ப்பை இழந்து அவுட்டானார். அடுத்து சூர்யகுமார் 40 பந்தில் 62 ரன்களுடன் ஆட்டத்தை இழந்தார்.
இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு கூடுதல் ரன்களை சேர்த்து விட்டு சென்றதால் மிக எளிதாக வெற்றி அடைந்துவிடும் என்று எதிர்பார்த்தனர். அதன்படி கடைசி மூன்று ஓடர்களில் 21 ரன்கள் தேடைப்பட்டது. 18வது ஓவரில் பெர்குசன் 5 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். அப்போது ஆட்டம் விறுவிறுப்புடன் சென்றது. கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 19வது ஓவரை சவுத்தி வீசினார். இதில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனால் கடைசி ஓவரின்போது இந்தியா வெற்றி பெறுவதற்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. டேரில் மிட்செல் அந்த ஓவரை வீசத்தொடங்கினார். முதன் பந்திலே வைடு போட்டு ஒரு ரன்னை விட்டுக்கொடுத்தார். அதற்கு அடுத்த பந்தில் வெங்கடேஷ் அய்யர் பவுண்டரி அடித்து விளாசினார். அப்போது மீதம் 5 பந்தில் 5 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உருவானது.
அதற்கு அடுத்த பந்திலே வெங்கடேஷ் அய்யர் விக்கெட்டானர். இதனால் 4 பந்துக்கு 5 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. அதற்கு அடுத்ததாக 3 -வது பந்து போடப்பட்டது. அதில் அக்சார் பட்டேல் ஒரு ரன் எடுத்தார். 4வது பந்தில் ரிஷாப் பண்ட் பண்டரிக்கு விரட்ட இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் கடைசி ஓவரில் ரசிகர்களிடம் மட்டுமின்றி கிரிக்கெட் வீரர்களும் பரபரப்பாக விளையாட்டை கவனித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Maalaimalar
Image Courtesy: Hindustan Times