Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா- இலங்கை 2வது ஒருநாள் போட்டி.!

இதில் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரேமதேசா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா- இலங்கை 2வது ஒருநாள் போட்டி.!

ThangaveluBy : Thangavelu

  |  20 July 2021 3:12 AM GMT

இந்தியா, இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 13ம் தேதி தொடங்கவிருந்த இப்போட்டிகள், வீரர்களுக்கு கொரோனா தொற்றுக்கு பிறகு 18ம் தேதி தொடங்கியது. இன்று முதல் வருகிற ஜூலை 23ம் தேதியும் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெறுகிறது.


இதில் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரேமதேசா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இன்று நடக்கும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், தொடரை கைப்பற்றும் வாய்ப்பைப் பெறும். எனவே, இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிகர் தவான் கேப்டனாக உள்ள இந்தத் தொடருக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக உள்ளார். மேலும் இரு அணிகளுக்கு இடையிலான டி20 போட்டிகளுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News