Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி.!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் தொடர் கிரிக்கெட் போட்டிகளையும் டி-20 போட்டிகளையும் விளையாட உள்ளது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி.!

ThangaveluBy : Thangavelu

  |  23 July 2021 3:05 AM GMT

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் தொடர் கிரிக்கெட் போட்டிகளையும் டி-20 போட்டிகளையும் விளையாட உள்ளது. இதில் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இறுதி ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்திய அணி தொடர் முழுவதும் வெற்றி காணுமா அல்லது இலங்கை அணி ஆறுதல் வெற்றி அடையுமா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடக்க உள்ளது. ஷிகர்தவான் கேப்டனாக இருக்கும் இப்போட்டிகளின் வெற்றி அவருக்கு சாதகமாக உள்ளது. வீரர்களுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் காரணமாக போட்டிகள் தள்ளிப்போட வழிவகுத்தது. இருந்தாலும் தொடர் போட்டிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News