Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளுமா? 2-ம் கட்ட டெஸ்ட் போட்டி தொடக்கம்!

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியில் எதிர்கொள்ளுமா? 2ம் கட்ட டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளுமா? 2-ம் கட்ட டெஸ்ட் போட்டி தொடக்கம்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Feb 2023 2:09 AM GMT

இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு அதிரடியாக பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. குறிப்பாக இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. தீவிரமாக பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த முறை வெற்றியை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ள ஆஸ்திரேலியா பலமாக பல்வேறு முயற்சிகளை செய்து வரலாம் என்று கருத்தும் நிலவுகிறது.


இன்றைய டெஸ்ட் காண ஆடுகளம் மெதுவான தன்மையுடன் சுழற் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் எடுத்துக் கொண்டால் விராட் கோலி முதல் டெஸ்ட் ஜொலிக்கவில்லை. கோலிக்கு இது சொந்த ஊர் மைதானம் ஆகும். ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து மிகுந்த நம்பிக்கையுடன் இந்திய அணியுடன் மோத இந்தியாவில் கால் பதித்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணி தொடக்கத்தில் துளிகூட போராடாமல் சரணடைந்தது.


இப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டி பலமாக நடைபெறுகின்றது. ஆஸ்திரேலியா ஊடகங்கள் ஆடுகளம் குறித்த தொடர்ச்சியாக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். ஒரு சிலருக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இது முற்றிலும் மறுக்கப்பட்டு இருக்கிறது. சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக பக்கபலமாக இருக்கும் ஆடுகளம் தான் தற்பொழுது தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறதாக கூறப்பட்டு உள்ளது.

Input & Image courtesy: Zee News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News